நலத்திட்ட உதவித்தொகைகளை ஜூலை 1 முதல் வழங்க ஜனாதிபதி உத்தரவு!


எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள “அஸ்வசும” நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த கொடுப்பனவுகள் இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் ஏழ்மையான நான்கு சமூக பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழக்கமான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.

நேற்றைய நிலவரப்படி, 91.5% தகுதிச் செயல்முறை நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments