2023 தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி வர்த்தக கண்காட்சியும் விற்பனை சந்தையும் - மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் புதுமண்டபத்தடி - தாண்டியடி சந்தைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை (07)காலை ஆரம்பித்துை வைக்கப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் முகாமைத்துவப் பணிப்பாளர் தங்கத்துரை தலைமையில்
நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி , கருத்திட்ட முகாமையாளர் தமயந்தி,, சமுர்த்தி வங்கி முகாமையாளர், என்.ஜெயசீலன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , வங்கிச் சசங்க கட்டுப்பாட்டுச்சபை பிரதிநிதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இச் சந்தையில் உள்ளூர் வியாபாரிகள், சமுர்த்தி உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை கொண்டு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு பிரதேச மக்களின் நன்மை கருதி சகாய விலையில் விற்பனை செய்யப்பட்டது
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் மக்களின் நலன்கருதி இரண்டு நாட்கள் கொண்ட புத்தாண்டு சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments