பிரபல பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளரான கமலா வாசுகி அவர்களின் ஓவியங்களின் கண்காட்சி இன்று 05 ஆந் திகதி தொடக்கம் எதிர்வரும்10 ஆந் திகதி வரைக்கும் மட்டுநகர், லேடிமனிங் டிறைவ் - கல்லடிப் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ள வாவிக்கரை வீதி எனும் முகவரியிலுள்ள இல்லத்தில் இடம்பெறுகின்றது.
இக் கண்காட்சி திங்கட்கிழமை 10ம் திகதி வரை மாலை 05:00 மணி வரைக்கும் நடைபெறவுள்ளது.
இவர், 1989.02.02 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் தனது முதலாவது ஓவியக் கண்காட்சியை நடத்தியதிலிருந்து இலங்கைத் தமிழ்ச் சூழலில் குறிப்பிடத்தக்க பெண்ணிலைவாத ஓவியக் கலைஞராகத் தன்னை வெளிக்காட்டியவராவார்.
இலங்கைத் தீவின் வரலாற்றில் 1989 தொடக்கம் 2023 வரையான காலகட்டம் என்பது கவனத்திற்குரிய சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்ட தீர்க்கமான காலமாக அமைந்துள்ளது. இக்காலகட்டத்தில் ஒரு பெண்ணிலைவாதக் கலைச்செயற்பாட்டாளராகத் தீவிரமாக இயங்கிய கமலா வாசுகி, தனது படைப்புக்களுடாக இக்காலத்தின் வலிகளையும், ஆற்றுப்படுத்தல்களையும், நம்பிக்கைகளையும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விளைகின்றார்.
ஒரு பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளராகக் கடந்த மூன்று தசாப்த காலமாகத் தான் எதிர்கொண்ட அனுபவங்களை ஓவியக் கலையாக்கங்களுடாக வெளிக்காட்டும் கலைத் தொகுப்பாக இக்காட்சியை கமலா வாசுகி நடாத்துகின்றார்.
0 Comments