சுவிஸ் அறம் அமைப்பினால் உதவி வழங்கல் - swiss Aram



 நாட்டின் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு சுவிஸ் அறம் (swiss Aram)என்னும் அமைப்பின் ஊடாக, இரண்டு பிள்ளைககுளுக்கு மேல் மூன்றாவது குழந்தையினை பெற்றெடுத்த தாய்மாருக்கு உதவி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு , நரிப்புல்தோட்டம் கிராமத்தில் திங்கட்கிழமை (06) நடபெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில்  உள்ள பாடசாலைகளை  கருத்தில் கொண்டு 2016 சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு   நரிப்புல் தோட்டம் கிராமத்தில் இரண்டு பிள்ளைககுளுக்கு மேல் மூன்றாவது குழந்தையினை பெற்றெடுத்த 5 தாய்மாருக்கு தலா ரூபாய் 10,000 வழங்கப்பட்டதுடன் பிள்ளைகளின் 18  வயது வரை மாதம் ஒன்றிற்கு ரூபா.1000 பிள்ளைகளின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.

இன்றைய தினம் (திங்கள்கிழமை) மேலும் 18 தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டதுடன் 

இத்திட்டம் தொடங்கி 7ஆவது ஆண்டு காலடிபதித்த இவ்வேளையில்  இத்திட்டத்தின் கீழ் பல கிராமப் பிரிவுகளிலும் இருந்து 152 தாய்மார்கள் உதவி தொகை பெற்று வருவதுடன் நாட்டின் அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு இவர்கள் அனைவருக்கும் ருபா 5000 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.

 இந் நிகழ்வுக்கு   மட்டக்களப்பு இறைவரி உதவி ஆணையாளர்  ரி. குணராசா, திருமதி சிவசாந்தி அமிர்தலிங்கம் , ஏற்பாட்டாளர் வே.சசிகரன் மற்றும் ,கிராம அபிவிருத்தி தலைவர், ஆலய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்  தாய்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.





Post a Comment

0 Comments