எஸ். சதீஸ் பிராந்திய செய்தியாளர் -
மட்டக்களப்பு ஆயித்தியமலை அன்னை இளைஞர் கழகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையம் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று புதன் கிழமை (08) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் தனியார் வயல்வெளி ஒன்றில் கூடாரம் அமைத்து இயங்கிவந்த இச்சந்தை
ஏ.யூ லங்கா நிறுவனத்தின் உதவியுடன் நிரந்தர நிலையம் அமைத்து இயங்க ஆரம்பித்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், ஏ.யூ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ராஜன் தவசீலன், முகாமையாளர் கஜன், திட்ட இணைப்பாளர் அனுலா, இளைஞர் சேவைகள் உதவிப் பணிப்பாளர் கலாராணி, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். ரவூப்,, இளைஞர் சேவைகள் அதிகாரி சசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆயித்தியமலை பிரதேச இளைஞர்களின் கூட்டு முயற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளூர் மரக்கறி வகைகள், முட்டை, உள்ளிட்ட பல உற்பத்திப் பொருட்கள் இச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.







0 Comments