மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா கொடுவாமடு காளி கோவிலில் சிறப்பாக இடம்பெற்றது.
அதிதிகள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பொங்கல் விழாவின் போது பாரம்பரிய முறைப்படி புதிர் எடுத்து வரப்பட்டு நெல் குற்றி பொங்கல் பொங்கிப் படைக்கப்பட்டது.
நிகழ்விற்கு கணக்காளர் டிலானி ரேவதன், நிர்வாக உத்தியோகத்தர் ந.கோமதி மற்றும் பிரதேச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வினை
சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments