75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சூழல் நேய பசுமை வேலைத் திட்டம்!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  "சூழல் நேய பசுமை வேலைத் திட்டம்" மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் கடமையாற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்களினால்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


இதன்போது நிழல் தரும்  மரக் கன்றுகள் இளைஞர் சேவை உத்தியோகத்தர்களுக்கு  வழங்கும் நிகழ்வு   கல்லடியில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிமனையில் உதவி பணிப்பாளர் திருமதி ஜேசுதாசன் கலாராணி  தலைமையில்   நேற்று (31)  இடம்பெற்றது.


இந் நிகழ்வின் இயற்கை மொழி அமைப்பின் தலைவி காயத்திரி உதயகுமார் மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்ள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments