மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் வீடு உடைத்து 44 அரை பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரகசிய தகவலுக்கமைவாக வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (06) மேற்கொண்ட நடவடிக்கையின்போது இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதன்போது, தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 Comments