தமிழரசுக் கட்சியின் மத்திய குழு இன்று கூடவுள்ளது.



இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ள நிலையில், அதில் பேசப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது. கட்சியின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சம்பந்தமாக மத்திய குழுவின் அங்கீகாரத்திற்கு விடப்பட்டு, பொதுச்சபையின் அனுமதிக்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.



Post a Comment

0 Comments