அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

கல்வி, கலை, கலாசார, வர்த்தக, சமூக நலத்துறைகளில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும், சாதனையாளர்களுக்குமான சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது  வழங்கும் விழா எதிர்வரும் 24.12.2022 திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு  மட்டக்களப்பு  ஊறணி  ஹிரிபோஜன் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர்  கலாபூசணம்  யு.எல்.எம். ஹனிபா  தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற உள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க. கருணாகரன் முதன்மை அதிதியாக

கலந்து கொள்ள உள்ளதுடன், இந்நிகழ்விற்கு கெளரவ அதிதிகளாக கலாநிநி   பொன்.நல்லரெத்தினம்,  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் செயளாலர் யு.எல்.எ.அஸீஸ், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர்.இ.உதயகுமார், மற்றும் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் மா.சோமசூரியம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அத்தோடு இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர் எம்.எஸ்.எம்.யாபிர்  மற்றும் அக்கரைப்பற்று  பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர்  கலாநிதி எஸ்.எம்.சதாத் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

அகில இலங்கை நல்லுறவு ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய இணைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இவ் வைபவம் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் கலாசார பிரிவின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.