(வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் பெண்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஐவெயார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் தெரிவித்தார்.
நியுஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் நிதியளிப்பினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்நிலையம் செவ்வாய்க்கிழமை 13.09.2022 வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நியூஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் (Brett Shields – Security and Migration Officer – New Zealand High Commission Colombo) காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் காத்தான்குடி ஆதார வைத்தியாசலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர் உட்பட சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண் செயற்பாட்டாளர்கள், ஐவெயார் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய ஐவெயார் நிறுனத்தின் பணிப்பாளர் அனீஸா, காத்தான்குடியில் உளநல ஆற்றுப்படுத்தல் நிலையம் மட்டுமல்ல பெண்களுக்காக ஆற்றப்பட வேண்டிய பல சேவைகள் காத்துக் கிடக்கின்றன. காத்தான்குடியிலுள்ள ஒட்டு மொத்த சனத் தொகையில் 52 வீதமானோர் பெண்களாக இருக்கும் நிலையில் இப்பிரதேசத்தில் பல்வேறு வகைப் பாதிப்பிற்குள்ளான பெண்களுக்காக ஒரு காப்பகம் தேவை, பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கான பாதுகாப்புடன் கூடிய அமைவிடம், பெண்களுக்கான விழிப்புணர்வூட்டல் அறிவூட்டல் நிகழ்ச்சிகளை நடத்த நிலையங்கள், ஆரோக்கிய நிலையங்கள்> போன்றவற்றின் தேவைப்பாடுக்ள் இருக்கின்றன.
0 Comments