மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு நலன்புரி உதவித் திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு நலன்புரி வேலைத் திட்டத்தின் கீழ் நிதி அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு திங்கட்கிழமை (08)ஏறாவூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்குடா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில்  இடம் பெற்ற இந் நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் மற்றும் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளருமான எம்.எல்.எம்.என்.நைறூஸ், ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம். நளீம் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிமிக்க இச்சூழலில் ஊடகவியலாளர்களின் பொருளாதார நிலையினை கவனத்தில் கொண்டு கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களால், தியாகி அறக்கொடை நிதியத்தின் இஸ்தாபகத்தலைவரும் சமூகச்செயற்பாட்டாளருமான " சமூகஜோதி" வாமதேவன் தியாகேந்திரனிடம் விடுத்தே கோரிக்கைக்கு அமைவாக 30 தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் அன்பளிப்புத்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

- எஸ்.சதீஸ்










 

Post a Comment

0 Comments