பிரதமராக சஜித்! எடுக்கப்பட்டது தீர்மானம்


சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்காக எதிர்க்கட்சிகள் சஜித் பிரேமதாசவின் பெயரை பரிந்துரைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், நாளையதினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சபாநாயகருக்கு இதை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


குறித்த கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, 10 கட்சிகளின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டளல் அழகப்பெருமவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.




Post a Comment

0 Comments