அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கம் நாளை திங்கள் 11ம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் அலுவலகங்களுக்கு செல்லாமல் பணியினை வீட்டில் இருந்து மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட சில பிரச்சனை காரணமாக சங்கம் இந் நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தகவலை சங்கத்தினர் அனைவருக்கும் தெரிவித்துள்ளனர்.
இத்தொழிற்சங்க நடவடிக்கை நாளை திங்கள் 11ம் திகதி தொடக்கம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments