வாழைச்சேனை நிருபர்
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கிரான் கிழக்கு நூறு வீட்டு திட்ட மீனவ கிராம மக்களின் நலன் கருதி குடிசை வீட்டுக்கான ஓலைக் கிடுகுகள் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி கிராமத்திலுள்ள 7 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் ரூபா பணமும் கிடுகுகளும் என ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியில் வழங்கி வைக்கப்பட்டது.
நீண்டகாலமாக குடிசை வீட்டில் வாழ்ந்தோர் ஓலைக் கூரை தூர்ந்து போய் காணப்பட்டதால் மழை,வெயில் காரணமாக வீட்டில் வாழமுடியாத சூழ்நிலையில் காணப்பட்டனர்.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழு;நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது குடிசை வீட்டினை புதிய கிடுகுகள் கொண்டு மேய்வதற்கு முடியாத நிலைமை காணப்படதாக கவலை தெரிவித்தனர்.
இவர்களது இவ்வாறான நிலை கண்டு கணடா நாட்டில் வாழும் தெய்வரூபன் தெய்வேந்திரன் என்பவரிடம் விடுத்த வேண்டுகோளினையடுத்து இவ் மனிதநேய உதவி வழங்கப்பட்டது.இதனை சமூக பற்றாளர் கு.வி.லவக்குமார் வழங்கி வைத்தார்.



.jpeg)

0 Comments