மட்டக்களப்பு - காத்தான்குடி பத்ரிய்யஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் 36வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி பெருவிழாவானது கடந்த
வெள்ளிக் கிழமை பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து நேற்று 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு இனிதாக நிறைவுபெற்றது.
36வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி பெருவிழாவின்போது மஜ்லிஸ்கள் பல இடம்பெற்று நேற்று இரவு பல ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு கந்தூரி உணவு விநியோகிக்கப்படமை இங்கு சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
இவ் இறுதிநாள் நிகழ்வில் இங்கு வருகை தந்த
அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு,, தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடர்ந்து கந்தூரி சமைத்த உணவு தானமாக வழங்கபபட்டது.
அதனையடுத்து அனைவராலும் இறைவழிபாடு இடம்பெற்றது. இதன்போது எமது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர விஷேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் (மிஸ்பாஹி) தலைமையில் இடம்பெற்ற இறுதி நாள் பெருவிழாவில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ராஜாத சிறி தமிந்த, கிரான்குளம் கிராணுவ தளபதி மேஜர் உதயகுமார, பள்ளிவாயல் நம்பிக்கை சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments