மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய 10ம் நாள் தீமிதிப்பு உற்சவம்


(மண்முனை நிருபர்)

மட்டக்களப்பில் புகழ்பெற்ற தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய அலங்கார திருச்சடங்கு உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை 3ம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி திருக்குளிர்த்தி பாடி அம்மன் உட்சவம் நிறைவுபெறவுள்ளது.

தாண்டவன்வெளி, ஏரன்ஸ் வீதி,  வாழ் மக்களால் பத்தாம் நாள் சடங்கு உற்சவததினை சிறப்பிக்கும் முகமாக குருந்தையடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து தீ குழிக்கான தீக்கட்டை மற்றும்
 மடப்பெட்டிகள் உள்ளிட்ட பூசைப் பொருட்கள் எடுத்துவரும் வைபவம் ஞாயிற்றுக் கிழமை (12) இரவு மேள தாள வாத்தியங்கள் முளங்க காவடிகள் ஆடிவர கண்ணகியம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது. 

கண்ணகியம்மன் ஆலய பிரதம குரு சிதம்பரசாந்தரூபக் குருக்கள் அவர்களால் பூசைகள் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து ஞாயிற்று கிழமை இரவு 10 மணியளவில் தீக்குழிக்கான தீ மூட்டும் வைபவம் இடம்பெற்றது.

10ம் நாள் திருச்சடங்கினை சிறப்பிககும் முகமாக திங்கட் கிழமை (13) அதிகாலை ஆலய பிரதம பூசகர் சித்திரவேல் ஐயா தலைமையில் தீமிதிப்புக்கான கிரியைகள் இடம் பெற்று, தீமிதிப்பு வைபவம் மிக சிறப்புடன் இடம் பெற்றது.

 செவ்வாய்கிழமை ( 14) அதிகாலை 5 மணியளவில் அம்பாளின் திருக்குளிர்த்தி பாடி உற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது.








Post a Comment

0 Comments