மக்கள் வங்கியில் 3 பில்லியன் கடன் பெற்றுக் கொண்டு மூன்று வருடங்களாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு வந்ததுடன் அந்தக் கடன் தொகையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் என்மீது பொய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவரின் இந்தக் குற்றச்சாட்டை நிராகரிப்பதுடன் அவருக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கு தொடுப்பேன் என முன்னாள் அமைச்சராக் தயா கமகே தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சாணக்கியன் எம்.பி. தெரிவித்திருப்பதுபோல் தயா கமகே ஒரு சதமேனும் மக்கள் வங்கியில் கடன் பெற்றதில்லை. நாங்கள் வியாபாரம் செய்கின்றவர்கள். வியாபார நடவடிக்கைக்காக தயா சமூக வியாபார நிறுவனம் மக்கள் வங்கியுடன் கடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் தயா சமூக நிறுனம் பெற்றுக்கொள்ளும் கடனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அதனால் எனது கெளரவத்தை பாதிக்கும் வகையில் என்மீது பொய் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சாணக்கியன் எம்பிக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கு தொடுப்பேன் என்றார்

0 Comments