வாழைச்சேனை நிருபர்
மட்டக்களப்பு களுவன்கேணியில் தற்போதைய நாட்டின் பொருளாதார நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வந்தாறுமூலை 'அகம் ஆதரவு கரங்கள்' வழங்கி வைத்தனர்.
பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கமைய அகம் ஆதரவு கரங்கள் அமைப்பில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்ற அங்கத்தவர்களின் நிதிப்பங்களிப்புடன் களத்தில் நின்று செயற்படுகின்ற அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் இவ் மனிதநேய உதவி வழங்கப்பட்டுள்ளது.எனவே இவ்வுதவியினை வழங்கிய அகம் ஆதரவு கரங்கள் அமைப்பினருக்கு தமது நன்றியை பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
0 Comments