வாழைச்சேனை நிருபர்
'சமகால பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வோம் தற்சார்பு வாழ்வை நோக்கிப் பயணிப்போம்' என்னும் கருத்திட்டத்திற்கமைய வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டம் கிண்ணையடி சுங்காங்கேணி பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கொண்டையன்கேணி,சுங்காங்கேணி மற்றும் கிண்ணையடி போன்ற கிராமங்களைச் சேர்ந்த 100 பயணாளிகள் தெரிவு செய்யயப்பட்டு அவர்களுக்கான 10 வகையான விதைப் பருப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.உற்பத்தி செய்யப்படும் பயிர் தோட்டங்களை நேரடியாக கண்கானித்து அதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
குறித்த திட்டமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னப்பலம்,மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர்களது ஆலோசனையின்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேற் படி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம்,தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் க.குககுமாரராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments