நரிப்புல்தோட்டம் ஸ்ரீ மாணிக்கவிநாயகரின் பாற்குடபவனியும், 1008 சங்காபிஷேகம்

(வவுணதீவு நிருபர்)

மட்டக்களப்பு நகரின் மேற்கே அமைந்துள்ள மண்முனை மேற்கு,  வவுணதீவு பிரதேசத்தின் நரிப்புல்தோட்டம் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ மகாகும்பாபிஷேக விஞ்ஞாபனம் கடந்த மாதம் 6ம் திகதி புதன்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ மாணிக்கவிநாயகருக்கு பாலாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ஆயிரத்து எட்டு சங்காபிஷேகமும் வெள்ளிக்கிழமை 20மதித்தி மிக கோலாகலமாக நடைபெற்றது.

நரசிங்க சுவாமி ஆலயத்திலிருந்து பிரதேச மக்கள குடங்களில் பால் எடுத்து பால்குட பவனியாக மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது விநாயகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இதனைதொடர்ந்து பிரதான கும்பங்கள் ஊர்வலமாக ஆலயத்தை சுற்றி வந்து
 மூல மூர்த்தியாகிய வினாயகருக்கு
சிவாச்சாரியார்  சிவஸ்ரீ .நா. ஸ்ரீரங்கநாதக் குருக்களால்
 அபிசேகம் செய்யப்பட்டது.


பால்குடபவனி பாலாபிஷேகம் இதனை தொடர்ந்து இங்கு 1008 சங்குகளை கொண்டு விநாயகப் பெருமானுக்கு 1008 சங்குகளைக் கொண்டு நாதஸ்வர மேள வாத்தியங்கள் முளங்க சங்காபிஷேகம் நடைபெற்றது


பிரதிஷ்டா பிரதமகுரு ஆச்சரியத்திலகம்  சிவாச்சாரியார்  சிவஸ்ரீ .நா. ஸ்ரீரங்கநாதக் குருக்கள் தலைமையில்  குருமார்களால்  யாகங்கள், பூஜைகள் கிரியைகள் யாவும் மிகச்சிறப்பாக நிகழ்த்தப்பட்டது















Post a Comment

0 Comments