ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் ஒழிய வேண்டும் - ஸ்ரீ. சு. கட்சியின் முன்னாள் அமைப்பாளர் ஹெங்காதரன்


புத்தாண்டுடன் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் ஒழிய வேண்டும் - ஸ்ரீ. சு. கட்சியின் முன்னாள் அமைப்பாளர் ஹெங்காதரன்  

க.விஜயரெத்தினம் - 

புத்தாண்டில் ராஜபக்ஷ குடும்பத்தின் படு மோசமான ஆட்சி அதிகாரம் ஒழிய வேண்டுவதுடன் நாட்டில்  மக்களின் பொருளாதார கஸ்டம் நீங்கப்பெறவேண்டும் என 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் ஹெங்காதரன்  இன்று வியாழக்கிழமை(14)காலை அவரது பெரியகல்லாறு அலுவலகத்தில்  பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி தெரிவித்தும்,கைவிஷேசம் வழங்கியும் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு  தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்...

இந்த நாடு மூவின மக்களும் ஒற்றுமையுடனும்,சகோதரத்துவதுடனும் ஒருதாயின் பிள்ளைகளாக வாழும் நாடாகும்.இந்த நாட்டிலே நடைபெற்ற கடந்த 70 வருட ஆட்சியிலும்,சுதந்திரத்திற்கு பிறகும் மக்களை நடு வீதியில் இறக்கி போராட வைத்த மிகை மோசமான ஆட்சியாக வர்ணிப்பது ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியாகும்.இவர்களின் காட்டாச்சியை நாட்டில் உள்ள இரண்டுகோடி மக்களும் திட்டி ஏசி "கோத்தபாய வீட்டுக்கு போ" என வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை ரோசமுள்ள ராஜபக்ஷ குடும்பத்தினர் விரைவிக ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவி விலகவேண்டும்.அத்துடன் மக்களின் வரிப்பணத்தில் ,பொருட்களின் விலையேற்றத்தில் சூரையாடிய பணத்தை மீண்டும் நாட்டுமக்களுக்கு வழங்கிவிட்டுச் செல்லுங்கள் என பொதுமக்கள் துணிச்சலுடன் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.இதனை ராஜபக்ஷ அரசாங்கம் அல்லது குடும்பம் ஏற்றுக்கொண்டு மிகவிரைவில் பதவி விலகவேண்டும்.


இன்றைய புத்தாண்டு காலத்தில் காலி முகத்திடலில் மக்கள் புத்தாண்டை கவனத்தில் எடுக்காது வீதியை மறித்து போரட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டிக்கொள்ளவில்லை என 68 இலட்சம் வாக்களித்த மக்கள் எங்களோடு இருப்பதாக மார்தட்டி பேசுகின்றார்கள்.உண்மையில் வாக்களித்த மக்கள் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை தூக்கி வீசிட்டு வீதியில் அத்தியாவசிய பொருட்கள், எரிவாயு,பெற்றோல்,மண்ணெண்ணை,டீசல்,பால்மா,குழந்தைகள்,பெண்கள்,முதியோர்கள் பயன்படுத்தும் கழிவகற்றிப்பொருட்கள், பழவகைகள் உள்ளிட்ட சுமார் 600 மேற்பட்ட பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாட்டை கண்டித்து இன்று வீதியில் குதித்துள்ளார்கள்.இவர்களின் போராட்டம் இன்றுடன் முடியப்போவதில்லை.எனவே ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள முனைகின்றார்கள்.பெரமுன கட்சிக்கு வாக்களித்த மக்களின் மனங்களில் பெரும்வாரியான எண்ணங்கள் மாற்றமடைந்துள்ளது.அதனால் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சி அஸ்தமனமாகியுள்ளது.இனியும் இவர்களின் ஆட்சியை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க மக்களின் இருப்பிடங்களுக்கோ அல்லது கிராமங்களுக்கோ யாரும் முன்வரமாட்டார்கள்.ராஜபக்ஷ குடும்பத்தைப்பற்றியோ அவர்களின் ஆட்சியைப்பற்றியோ இனியும் நல்லா பேசமாட்டார்கள்.மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சரோ அல்லது மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரோ இனியும் மக்கள் பிரதிநிதியாக வரமுடியாது.இவர்களுக்கு வாக்களித்த மக்கள் உண்மையை இப்போது ஏன் வாக்களித்து அனுப்பினோம் என புரியத்தொடங்கியுள்ளார்கள்.வாக்களித்து ஏமாந்ததுதான் மிச்சம்.இருவரும் பொதுஜன பெரமுன ஆட்சியில் கோபுரமாய் உழைத்து தனவந்தரர்களாகிட்டார்கள் என பொதுமக்கள் ஏப்பமிட்டு கண்ணீர் சிந்துகின்றார்கள் எனத்தெரிவித்தார்.



Post a Comment

0 Comments