வவுணதீவு பொலிஸ்பிரிவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

சதீஸ்

மட்டக்களப்பு - 
வவுணதீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்;ட சொறுவாமுனை கிராமத்தில் 
மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் 
 இன்று அதிகாலை  தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

தனது காணியில் உள்ள மற்றுமொரு வீட்டில் மேற்படி நபர் தூக்கில் தொங்கி நிலையில் அதிகாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற் நீதிவான் ஏ.சி.றிஸ்வான்  அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Post a Comment

0 Comments