வீட்டுத்தோட்ட பயிர் செய்கை புரட்சி - வேலை த் திட்டம் வவுணதீவு பிரதேசத்தில் ஆரம்பம்

வீட்டுத்தோட்ட பயிர் செய்கை புரட்சி - 2022 வேலை த் திட்டம் வவுணதீவு பிரதேசத்தில் ஆரம்பம்



மண்முனை நிருபர் -

பசுமையானது ஒரு தேசம் எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்
வீட்டுத்தோட்ட பயிர் செய்கை புரட்சி எனம் விவசாய வீட்டுத்தோட்ட பயிற்சியை வேலைத்திட்டம் இன்று செவ்வாய்கிழமை 29ம் திகதி தேசிய ரீதியில் ஆரம்பமானது.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தின் 24 கிராம சேவகர் பிரிவுகளிலும்  இந் நிகழ்வு சிறப்பபுடன் இடம்பெற்றது.


பிரதேச செயலக பிரதான நிகழ்வு கரவெட்டி கிராமத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் காலை 9:18 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வீட்டுத் தோட்டங்களில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக கணக்காளர்,
சமுர்த்தி தலைமையக முகாமையாளர்,  முகாமைத்துவப் பணிப்பாளர், முகாமையாளர்கள், விவசாய போதனாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதேவேளை ஆயித்தியமலை தெற்கு, ஒளிமடு கிராமத்தில் கிராமத்துக்கு பொறுப்பான வெளிக்கள உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் பொலிசாரின் பங்குபற்றலுடன்  வீட்டுத் தோட்டங்களில் பயிர் கன்றுகளும் நடப்பட்டது.










Post a Comment

0 Comments