இந்த ஆட்சியாளர்களின் நிருவாகத்தை நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை - ஸ்ரீ. சு. கட்சியின் முன்னாள் அமைப்பாளர் .


(க.விஜயரெத்தினம்) 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரன் அன்று காட்டுக்குள் இருந்து நாட்டை நடாத்திய நிருவாகம் போன்று இன்று ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் இந்த நாட்டுக்குள் இருந்து ஆட்சியை நடாத்துவதற்கு  தவறிவிட்டார்கள். சொல்லப்போனால் இந்த ஆட்சியாளர்களின் நிருவாகத்தை நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விமல்வீரவன்ச,உதயன் கம்மன்வில,வாசுதேவ நாணயக்கார போன்றோர்களின் பிளவுகள் நாடு முழுவதும் பேசப்படுகின்றது.இவர்களின் பிளவுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானின் பிளவுகள் போன்றுதான் இருக்கின்றது.இவரின் பிளவுகள் மொட்டு ஆட்சிக்கு பல பின்னடைவுகளை சந்திக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் ஹெங்காதரன்  இன்று செவ்வாய்க்கிழமை(29)காலை 10.00 மணியளவில் அவரது பெரியகல்லாறு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்....

69 இலட்சம் மக்களின் தூரநோக்கற்ற தெரிவு காரணமாக இன்று முழுநாட்டு மக்களும் பாரியதொரு இன்னலான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.எனவே மிகவிரைவில் இந்த ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்து மக்களை இந்த கொரூரமான பிடியிலிருந்து மக்களை மீட்போம்.


திட்டமிடத்தவறியவன் தவறு செய்ய திட்டமிடுகின்றான்.இந்த நாட்டு ஆட்சியாளர்களுக்கு சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் மக்கள் பாரியதொரு பிரச்சனைக்குள் மாட்டிவிட்டார்கள்.இதற்கு நாட்டுமக்கள் உணர்ந்து ஒற்றுமையுடன் நல்ல முடிவை எடுத்தால்தான் ஆட்சியை மாற்ற முடியும்.எனவே இந்தசூழ்நிலையில்  அரசாங்கம் நிவாரணம் வழங்கவில்லை.இந்த பொருளாதார கஸ்டநிலையில் 5000 ரூபா அரசாங்கம் வழங்கினால் போதுமானதாகவில்லை.கொடுக்கின்ற சூழ்நிலையில் 5000 ரூபாவுக்கு எரிவாயு கேஸ் மட்டும்தான் வாங்கமுடியும்.


முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரெத்தின மற்றும் அவரது புதல்வர்கள் இனவாதமற்ற தூரநோக்கு சிந்தனையுடைய தலைவர் அவர் போன்ற தலைவர்தான் நாட்டுக்கு ஜனாதிபதியாக வரவேண்டும்.பதவியை நான் தேடிப்போகமாட்டேன்.என்னை பதவிகள்தான் தேடிவரவேண்டும்.இந்த நாட்டிலே ஒரு தனிக்கட்சியால் ஆட்சியமைக்க முடியாது.நாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை மாற்றியமைக்க பல பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஆட்சிமாற்றத்திற்கான நேரம் வரவிருக்கின்றது.


30 வருடகால அஹிம்சைவழிப் போராட்டம்,ஆயுதப்போராட்டத்தால் நாட்டிலுள்ள தமிழ்மக்களுக்கு தீர்வை ஆட்சிக்குவரும் அரசாங்கம் வழங்கவில்லை.எனவே அரசாங்கம் வழங்க முன்வரவேண்டும்.நாடு இரண்டாக பிளவுபடாத தீர்வை மக்களுக்கு வழங்கவேண்டும்.


ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் நாட்டுமக்களிடம் அன்பு,ஆதரவு,இரக்கமற்றவர்கள்.இவ்வாறு நாட்டுமக்களிடம் கரிசனை இருந்திருந்தால் பொருட்களின் விலையேற்றி,பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதற்கு வீதியில் இறக்கிவிடமாட்டார்கள்.நாட்டுமக்களிடம் நாங்கள் சொல்லியிருந்தோம் ராஜபக்ஷ ஆட்சியாளர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டாம் என்று கூறியிருந்தோம்.மக்கள் கேட்கவில்லை.இதனால் 69 இலட்சமக்கள் முட்டாளாக மாறியுள்ளார்கள்.


விமல்வீரவன்ச,உதயன் கம்மன்வில,வாசுதேவ நாணயக்கார போன்றோர்களின் பிளவுகள் நாடு முழுவதும் பேசப்படுகின்றது.இவர்களின் பிளவுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானின் பிளவுகள் போன்றுதான் இருக்கின்றது.இவரின் பிளவுகள் மொட்டு ஆட்சிக்கு பல பின்னடைவுகளை கொடுக்கும்.


தேசியத்தலைவரை உண்மையாக நான்  மதிக்கின்ற தலைவன்.தேசியத்தலைவரின் போராட்டத்தை ஒப்பிடும்போது அவர் சிறந்த போராட்டத்தை முன்னெடுத்த தலைவன்.தமிழ்மக்களின் மக்கள்மனம் வென்ற தலைவன்.அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று காட்டுக்குள் இருந்து நாட்டை நடாத்திய நிருவாகம் போன்று இன்று ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் இந்த நாட்டுக்குள் இருந்து ஆட்சியை நடாத்துவதற்கு  தவறவிட்டார்கள்.சொல்லப்போனால் இந்த ஆட்சியாளர்களின் நிருவாகத்தை நாட்டுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.தேசியத்தலைவரை சிறந்ததொரு தலைவராக நான் கருதுகின்றேன்.


உயர,உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.மட்டக்களப்பு மாவட்டதில் இருக்கின்ற ஆளும்தரப்பு அரசியல்வாதிகளால் தமிழ்மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் மாவட்ட தமிழ்மக்கள் திணறுகின்றார்கள்.மாவட்டத்தில் உள்ள சகோதர முஸ்லிம் அரசியல்வாதிகள் போன்று எமது ஆளும்தரப்பு அரசியல்வாதிகளால் தமிழ்மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாதநிலையில் தமிழ்மக்கள் உள்ளார்கள்.உதாரணமாக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஜ் சொல்லியிருந்தார் அபிவிருத்திகுழுத் தலைவர் எனும் பதவி அதிகாரத்தை வைத்துக்கொண்டு நான் நீதிபதியை மாற்றி கல்குடாவில் தமிழர்களின் காளிகோயிலை இடித்து நான் மீன் சந்தை அமைத்து கொடுத்துள்ளேன் எனக் கூறியிருக்கின்றார்.தற்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகுழுத்தலைவர் பிள்ளையானால் ஏன் மீன் சந்தையை உடைத்து காளிகோயிலை ஏன் அமைக்க முடியாது? எனக்கேட்கின்றேன்.இதே பதவியில் அப்போது மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவராக இருந்த ஹிஸ்புல்லாவால் முடிந்தது.ஏன் பிள்ளையானால் செய்ய முடியாமல் இருக்கின்றது என கேள்வி கேட்கின்றேன்.இந்த மீன்சந்தையை மீண்டும் காளிகோயிலாக அமைப்பதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர்,ஆட்சியாளர்கள் இணக்கம் தெரிவிக்க வேண்டும்.இல்லாவிட்டால் செய்யமுடியாது.எனவே தமிழ்மக்களை ஆளும்தரப்பு இராஜாங்க அமைச்சர்,பிள்ளையான் போன்றோர்கள் ஏமாற்று அரசியல் செய்கின்றார்கள்.


குளிருளிலும்,அட்டைக்கடியின் மத்தியிலும் கொழுந்து பறிக்கும் மலையமக்களுக்கு இன்னும் ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்கவில்லை.லயம் வீடுகளை திருத்திக்கொடுக்காத ராஜபக்ஷ அரசாங்கம் ஆயிரம் ரூபா சம்பளத்தை எப்படி கொடுக்கப்போகின்றது.நான் நினைக்கவில்லை புலம்பெயர் தமிழ் உறவுகள் பட்டறிந்துகொண்டவர்கள்.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் புலம்பெயர் உறவுகள் நாட்டுக்கு பொருளாதார முதலீடுகளை வழங்க முன்வரனும்.அதற்குரிய முழுப்பாதுகாப்பையும் நாங்கள்  இப்போது வழங்குவோம் என தெரிவித்த ஜனாதிபதியின் கருத்தை புலம்பெயர் உறவுகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.ஆட்சி மாற்றத்தால்தான் புலம்பெயர் உறவுகளின் முதலீட்டார்களை என்னால் கொண்டு வரமுடியும்.எனக்கு மட்டுமல்ல நாட்டுமக்களுக்கும் தற்போது ஆட்சிமாற்றம் தேவையாக இருக்கின்றது.இனத்துவேசமற்ற,மத வேறுபாடு அற்ற, சிறுபான்மையின மக்களை நேசிக்கும் நல்லதலைவரை நாட்டுமக்கள் கொண்டு வருவார்கள் எனத்தெரிவித்தார்.





Post a Comment

0 Comments