ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; மட்டக்களப்பில் சம்பவம்



மட்டக்களப்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சுமனன் தேவபிரதீபன் என்ற ஊடகவியலாளரே  இன்று சனிக்கிழமை காலை தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கிழக்கு பல்கழலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் தேவபிரதீபன் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஊடகவியலாளரை தாக்கியவர் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து செயற்பட்டு வரும் நபர் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்

தொடர்ச்சியாக இலங்கையில் ஊடக சுதந்திரமும் ஊடகவியலாளரின் சுதந்திரமும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.  







Post a Comment

0 Comments