எஸ். சதீஸ் -
இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வு, மட்டக்களப்பு பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் இன்று (04) இடம்பெற்றதுகொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மக்கள் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தற்போது கொவிட் காலத்திலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கட்சியின் பிரதேச இணைப்பாளர்களால் இங்கு வருகை தந்த மக்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வைத் தொடர்ந்து மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் சூழ்நிலையினால் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்த அரசாங்கம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களை ஒருபோதும் கைவிடவில்லை.
அபிவிருத்தி பணிகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. விசேடமான அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவுள்ளது.
இந்த அரசாங்கம் இன மத பிரதேச பாடுபாடு காட்டாமல் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மிகவும் முன்னேற்றகரமாக இடம்பெற்று வருகின்றது.
மற்றவர்களின் வதந்திகளையும் பொய் பரப்புரைகளையும் கேட்டு எம்மீது சந்தேகள் கொள்ளத் தேவையில்லை எமது ஜனாதிபதி, மற்றும் நிதியமைச்சர் இந்த நாட்டு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு. சிறந்த திட்டங்களை வருத்துள்ளனர். என தெரிவித்தார்.
0 Comments