பொலிஸ் கான்ஸ்டபிள் கொலைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது



தங்காலை பொலிஸ் கான்ஸ்டபிள் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி இரவு தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது மனைவி மற்றும் அவரது இளைய சகோதரர் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

தாக்குதலில் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளதுடன் அவரது இளைய சகோதரர் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மற்றும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சதுரங்க தில்ஷான் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் சிலருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments