எஸ்.சதீஸ் -
மட்டக்களப்பு முனைக்காட்டில் வறிய குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முனைப்பு நிறுவனத்தின் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் தையல் மற்றும் ஆடை விற்பனை நிலையம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முனைக்காட்டைச் சேர்ந்த வறிய குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது தையல் திறமையை வைத்து தொழிலை முன்னெடுக்க மூலதனம் இல்லாது கஸ்ரப்பட்ட நிலையில் முனைப்பு நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டது, அதற்கமைவாக தையலுக்கான மூலப்பொருட்களைப் பெற்று ஆடைகளை தைத்து விற்பதற்காகன வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மா.குமாரசாமி, முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர் அ.தயானந்தரவி மற்றும் நிருவாக சபை உறுப்பினர் சி.சிவறஞ்சினி, கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு திட்டத்தை ஆரம்பித்துவைத்தனர்.
0 Comments