ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
வனராஜா தோட்ட தொழிற்சாலையின் நுளைவாயில் பகுதியிலே இன்று (30) இரவு 6.40 மணியளவில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
டிக்கோயா தரவலை விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு டிக்கோயா கிளங்கள் பகுதிக்கு சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த வேனில் 15 பேர் பயணித்துள்ளதுடன் அதில் 09 பேர் காயமுற்று டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
0 Comments