கொழும்பு – வௌ்ளவத்தை பகுதியிலுள்ள தொடர் மாடி குடியிருப்பொன்றின் 7வது மாடியிலிருந்து நபரொருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

87 வயதான ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன உலைச்சலே, தற்கொலைக்கான காரணமாக என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் - http://www.beetamil.com