எஸ். சதீஸ் -
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற இடம்பெற்றது
இந்நிகழ்வில் அதிதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி வாசுதேவன் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் குலேந்திரகுமார் சுஜாதா, வைத்திய கலாநிதி எஸ். சக்தியவாணி, மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். விவேகானந்தன்,
ஒய்வு நிலை கல்விப்பணிப்பாளர் பவளகாந்தன், கோட்டக்கல்லி பணிப்பாளர் பி.ரவிச்சந்திரா,முன்னாள் ஓய்வுநிலை கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ. சுகுமாரன், விசேட அதிதியாக ஓய்வுபெற்ற அதிபர் ஏ. யோகராஜா போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
அதிதிகள் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல், பாடசாலை கீதம், வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகளுடன் இப் பரிசளிப்பு விழாவானது ஆரம்பமானது
இதன்போது கடந்த 2019 , 2020ஆம் ஆண்டுகளில்
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், பாடசாலை இணைப்பாடவிதான நடவடிக்கையில் தெரிவு செய்யப்பட்டார் மாணவர்களுக்கும் பரிசுகளும்
சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
கடந்த 2019/ 2020 ம் ஆண்டு மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments