வடமுனை, ஊத்துச்சேனை கிராமங்களில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு



நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு  சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வெள்ளிக்கிழமை 30.12.2021ம் திகதி வடமுனை, ஊத்துச்சேனை போன்ற இடங்களில் வழங்கிவைக்கப்பட்டது

இதன்போது கிரான் பிரதேசத்திலுள்ள இவ் இரு கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு C. யோகராஜாவின் நிதியுதவியில்,  மட்டக்களப்பு  93ல் உயர்கல்வி கற்ற மாணவர்களால்  (93'நண்பர்கள்)  இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்

புனித மிக்கல் கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 1993ல் உயர்தரம் கல்வி பயின்ற மாணவர்களை ஒன்றினைத்து Friends of '93 Batch - Batticaloa எனும் பெயரில் பல சேவைகளை மட்டக்களப்பில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














Post a Comment

0 Comments