வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் முதியோருக்கு உதவி

 


எஸ்.சதீஸ்     

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் முதியோர் தேசிய செயலகத்தினால் தெளிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (27.12.2021) பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இதன்போது பிரதேச சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக கரவெட்டி திராமத்தில் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்திற்கு ருபா ஐந்து இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி, மெத்தை, பாத்திரங்கள், மின்விசிறிகள், அரவை இயந்திரம், நீர் குழாய்கள் மற்றும் பல பொருட்கள் இதன்போது உரிய முதியோர் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவி பிரதேச செயலாளர்  சுபா சதாகரன்,  முதியோர் தேசிய செயலகத்தின் மாவட்ட அதிகாரி விஸ்வகோகிலன், பிரதேச சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் சி. சிவநாயகம், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் இ.சுபாஜினி மற்றும் முதியோர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இப்பிரதேசத்தில்
முதியோர் கட்டிடம் திருத்தப்பணிக்காக  3 இலட்சம் ரூபாவும், 

வறுமையிலுள்ள முதியோர் ஒருவருக்கு திரிய பியச வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கு 3 இலட்சம் ரூபாவும், பிரதேச செயலகம் ஊடக முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது






Post a Comment

0 Comments