(வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை, கற்சேனை பிரதேசத்தில் ஆலய வளாகத்திலிருந்து குடும்பஸ்தர் ஒருவரை கொலை செய்த கொலையாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகப்பன் லோகிதன் (வயது 47) என்பர் தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள ஆலய வளாகத்தில் இரவில் தங்குவதற்காக வழமை போன்று சென்றிருந்தவர் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மட்டக்ளப்பு நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டபோது மரணமானவரின் களுத்துப்பகுதியில் காயம் மற்றும் அதிகமான இரத்தப்போக்கு காணப்பட்டதனையடுத்து சம்பவத்தை பொலிஸார் ஊடாக மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களுக்கு சம்பவத்தை தெரியப்படுத்திருந்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் சம்பவம் பற்றி அவதானித்ததன் பிற்பாடு பிரேதத்;தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படியும் விசாரணைகளை துரிதப்படுத்தும்படியும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில்; சந்தேகத்தின் பேரில் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் குறித்த நபர் தானே கொலையை செய்துள்ளதாக தனது குற்றத்தை ஏற்க்கொண்டதுடன் குறித்த நபரை கொலை செய்வதற்காக பயன்படுத்திய கூரிய ஆயுதத்தினை தான் இரகசியமாக வைத்திருந்த இடத்தினை காண்பித்துள்ளதாகவும் தனக்கும் கொலை செய்யப்பட்ட்வருக்குமிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பகையினாலேயே அவரை தான் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
நீண்டநாள் பகையினை தீர்த்துக்கொள்வதற்காக தான் காத்திருந்து சிறிய கூரிய கத்தியினால் தூக்கத்தின் போது கழுத்தில் குத்தி கொலை செய்ததாகவும் கத்தியை அருகிலுள்ள வயப் பகுதியில் மறைத்து வைத்ததாதகவும் விசாரணையின் போது தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள நபர் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் அவர்களின் முன்நிலையில் (ஞாயிற்றுக் கிழமை(19) ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பொலிஸர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments