நாடு முழுவதும் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவியை வழங்கும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இலவச சட்ட உதவியை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு வழங்குவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தயாராக உள்ளது எனவும் அவர் கூறுகின்றார்.
தரமற்ற அரசாங்கத்தைக் கொண்ட நாட்டில் தரமான எதையும் எதிர்பார்க்க முடியாது எனவும், தரமற்ற ஆட்சியை அகற்றுவதே மேற்கொள்ள வேண்டிய விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தரமற்ற உர இறக்குமதியினால் நாடு பெரும் பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், நாட்டின் பொருளாதாரத்தையும், விவசாய சமூகத்தின் வாழ்க்கையையும் அரசாங்கம் ஆபத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
0 Comments