6.7 மில்லியன் அமெரிக்க டொலரை சீனாவுக்கு செலுத்த அரசாங்கம் தீர்மானம்



சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பக்றீரியாக்கள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரம் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, இலங்கைக்கு உரத்தை கொண்டு வந்த கப்பல், சுமார் 70 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இருந்தது.

தமது உரத்தில் அவ்வாறான பக்றீரியாக்கள் கிடையாது எனவும், இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட சர்வதேச ஆய்வு நிறுவனமொன்றுக்கு செல்ல வேண்டும் எனவும் சீனா கூறி வந்தது.

எனினும், இலங்கை குறித்த உரத்தை தொடர்ச்சியாக நிராகரித்து வந்த பின்னணியில், குறித்த சீன நிறுவனம் மத்தியஸ்த சபைக்கு செல்வதாக தெரிவித்து, கடந்த 4ம் திகதி இலங்கை கடற்பரப்பிலிருந்து கப்பல் வெளியேறியது.

இவ்வாறான நிலையில், குறித்த உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments