வாள்களுடன் மூன்று நபர்கள் கைது



மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள் மற்றும் கை கோடாரி என்பவற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (13.11.2021) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.சுதர்சன் தெரிவித்தார்.


சந்திவெளி பொலிஸ் பிரிவில் சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வாள்களுடன் ஒரு குழு சுற்றித்திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக ஆறு வாள் மற்றும் கை கோடா ரி ஒன்று என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.சுதர்சன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரனைகள் இடம் பெற்று வருவதுடன் இவர்களை ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments