(எஸ். சதீஸ)
இந்திய பரத நாட்டிய கலைஞர் கலைமாமணி மதுரை இராமச்சந்திரன் முரளிதரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மதுரை நடனம் நிகழ்வில்
“அதிக அளவானோர் ஒரே வேளையில் இணையவழியில் ஆற்றுகையில் கின்னஸ் உலக சாதனைக்காக கடந்த ஒகஸ்ட் மாதம் நெறியாழ்கை செய்யப்பட்டது. இதில் மட்டக்களப்பு பரத கலாலயா மாணவர்கள் ஒன்பது பேர் இந்த உலக சாதனையில் தங்கள் பெயர்களை பதித்துள்ளனர்.
இச்சாதனையில் இடம்பிடித்த ஒன்பது மாணவியர்களுக்குமான பாராட்டு நிகழ்வு நேற்று மட்டக்களப்பு பரத கலாலயாவில், நடன ஆசிரியை பரத கலாலயா, கலாபூஷணம், பரதசூடாமணி திருமதி. சுபித்ரா கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின்போது கின்னஸ் உலக சாதனைக்காக நெறியாழ்கை செய்யப்பட்ட நடனம் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் குறித்த ஒன்பது மாணவியர்களும் தமது உலக சாதனைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ்களை ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொண்டதுடன் பாராட்டுக்களையும் பெற்றனர்.
கொரோனா நிதிக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் அதிக அளவானோர் ஒரே வேளையில் இணையவழியில் ஆற்றுகை செய்யப்பட்டு இல் வர்ணம் கின்னஸ் உலக சாதனைக்காக நெறியாழ்கை செய்யப்பட்டது.
மட்டக்களப்பு பரத கலாலயா, கலாபூஷணம், பரதசூடாமணி திருமதி. சுபித்ரா கிருபாகரன் அவர்களின் மாணவர்களான துவாரகா துஷன், கதரின் திவ்யா யோகராஜா, அகஸ்தியா ஞானப்பிரகாசம், ஷஜிவா அருளானந்தம், மாதுரி சங்கர், வித்யஷாயினி இருதயநாதன், பிரித்தா ஜெயகாந்தன், ஸ்வர்ணா ஜீவதாஸ், சுரபி கமலநாதன் ஆகியோர் ஆகியோர் பங்குபற்றி உலகசாதனை புத்தகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டதுடன் மட்டக்களப்பு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
உலகெங்கிலும் இருந்து நிகழ்நிலையில் 850 நடனக்கலைஞர்கள் கின்னஸ் உலக சாதனைக்காக பங்கேற்ற மாபெரும் இந் நடன நிகழ்வில் இலங்கையிலிருந்து 67 கலைஞர்கள் பங்கேற்றதோடு கிழக்கிலங்கையிலிருந்து 45 கலைஞர்கள் பங்குற்றியமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை போன்று எதிர்கால எமது மாணவர் மற்றும் இளம் சந்ததியினர் இந்த பரத நடனக்கலையினை முறைப்படி பயின்று பல சாதனைகளை படைக்க வேண்டும் என இந் நிகழ்வின்போது பரதகலாலயா, கலாபூஷணம் , பரதசூடாமணி, திருமதி சுபித்ரா கிருபாகரன் அவர்கள் தெரிவித்தார்.


0 Comments