அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசசேவையை கலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது- சஜித்

 



அரசஊழியர்கள் நாட்டிற்கு சுமை என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதை கண்டித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசசேவையை கலைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்


பொதுச்சேவை தற்போது நாட்டினால் சுமக்கமுடியாத அளவிற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது அது நாட்டிற்கு சுமையாக உள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்,இது அரசாங்கத்தின் நிலைப்பாடு என நாங்கள் கருதுகின்றோம் அதனை கண்டிக்கின்றோம் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசசேவையை செயல் இழக்க செய்ய முயல்கின்றது என நாங்கள் கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60லிருந்து 65 ஆக உயர்த்துவதாக வரவு செலவுதிட்ட யோசனையில் அறிவித்த நிதியமைச்சர் மறுநாள் அரச ஊழியர்கள் சுமை என்கின்றார் என குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச அமைச்சர் தனது வரவு செலவுதிட்ட யோசனையை மறுநாளே மீறியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தங்களை வெற்றிபெற வைத்த அரசாங்க ஊழியர்களை அரசாங்கம் இவ்வாறு நடத்துவது குறித்து நாங்கள் ஆச்சரியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments