மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள 30 பாடசாலைகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அனுசரணையில் Rotary Club of colombo Midcity யுடன் இணைந்து கிருமிதொற்று நீக்கிகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கப்பிரதிநிதி உதயச்சந்திரன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி எஸ். முருகேசப்பிள்ளை தலைமையில் தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வைத்து இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கபப்டது.
மேற்படி தொற்று நீக்கிகள் உள்ளிட்ட பொருட்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது.
மண்முனை மேற்கு கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 30 பாடசாலைகளுக்கு சுமார் நான்கு லட்சம் பெறுமதியான கிருமிதொற்று நீக்கிகள் வழங்கிவைக்கப்பட்டது
இந் நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்குமாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமாகிய பொன்னுத்துரை உதய ரூபன், ரொட்டரி கழகம் கொழும்பு மெடிசிட்டி பிரதிநிதிகள் மற்றும் கல்வி திணைக்கள அலுவலர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments