வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஆர்.பி.ஜி ஆயுதம் மீட்பு



(வவுணதீவு நிருபர்)

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுவிற்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் வயல் பகுதியில் இருந்து ஆர்.பி.ஜி  லோஞ்சர் ஆயுதம் ஒன்று  திங்கட்கிழமை (25)  மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த RPG ஆயுதமானது வேளாண்மை பயிர்ச்செய்கைக்காக வயல் நிலங்களை பண்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அகப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம மக்களின் தகவலுக்கமைவாக  சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் ஆயுதத்தை மீட்டு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு குறித்த ஆயுதத்தினை(RPG) எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ் ஆயுதம் கடந்த யுத்த காலத்தில் கைவிடப்பட்டு சென்றிருக்கலாம் என தெரியவருகின்றது

குறித்த  ஆயுதம்(RPG) தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது


Post a Comment

0 Comments