மட்டக்களப்பு பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவில் விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் திகழ்வு




சதீஸ்


பயிர் மாற்றுத் திட்டத்தின் கீழ்   மட்டக்களப்பு பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவில் விவசாயிகளுக்கு நிலக்கடலை, கெளப்பி போன்ற விதைகள் இலவசமாக வழங்கும் திகழ்வு இன்று சனிக்கிழமை   இடம்பெற்றது.



பழுகாமம் பிரதேசத்தின் விவசாயப் போதனாசிரியர் பரமேஸ்வரன்.சகாப்தனின் ஏற்பாட்டில்  கழுமுந்தன்வௌியில்  இடம்பெற்ற இந் நிகழ்வில்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன், நீர்பாசன திணைக்கள  பிராந்திய பணிப்பாளர் நாகரெத்தினம், பிரதேச செயலாளர் இராகுலநாயகி, மாவட்ட பிரதி விவசாய பனிப்பாளர் பேரின்பராஜா , பொறியியலாளர் கீதா அருண், 
உதவி விவசாயப்பணிப்பாளர் மேகராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர்


நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பி...எஸ்...பிதிட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் 50 இற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் அப்பகுதியைச் சேர்ந்த 100 இற்கு மேற்பட்ட விவசாயிகள் நன்மையடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.









Post a Comment

0 Comments