(எஸ்.சதீஸ் )
பங்களாதேஷில் இந்துக்கள் மீது நடாத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலுக்கு கண்டனமும் படுகொலை செய்யப்பட்டோருக்கு ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனையும் வெள்ளிக்கிழமை 6 மணி தொடக்கம் 7 மணிவரை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள திருச்சொந்தூர் முருகன் ஆலையத்தில் இடம்பெற்றது
இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அதன் தேசிய அமைப்பாளர் சி.வரதநிரோசன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது
நவராத்திரி தினத்தன்று பங்களாதேஷில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்ததுடன் இதற்கு எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.
இதன்போது இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சி.வரதநிரோசன் கருத்து தெரிவிக்கையில்,
பங்களாதேசில் 2013 ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 680 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் நவராத்திரி தினத்திலே இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமிய மதவெறியாளர்களால் கொலை வெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சுவாமி நிதிதாஸ் பிரபு உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன். 550 வீடுகள், 442 கடைகள், தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 861 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் பல பெண்கள் மாபங்கப்படுத்தப்பட்டதுடன் 1608 இந்து மற்றும் பௌத்த விகாரைகள். இராமகிருஷ;ண மிஷன், உட்பட வணக்கஸ்தலங்கள் உட்பட 51 அம்மன் சக்தி பீடங்களில் இரண்டான தாட்சாயினுடைய 50 வது சக்தி பீடமான அவரது வலதுகை வீழ்ந்த இடம் , நாக்கு வீழ்ந்த இடமான இரு சக்தி பீடகள் தாக்கப்பட்டுள்ளது
இவ்வாறான தாக்குதல் இனிமேல் இடம்பெறக்கூடாது எனவும் இதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கும் முகமாக கையெழுத்து வேட்டையினை ஆரம்பித்துள்ளதாகவும் இந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சி.வரதநிரோசன் தெரிவித்தார்.
0 Comments