மருதங்கேணி பகுதியில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!



யாழ்.மருதங்கேணி பகுதியில் இன்றைய தினம் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தனியார் காணி ஒன்றினை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும் போது குறித்த வெடிப்பொருட்கள் இருப்பதை அவதானித்துள்ளார்.


இது தொடர்பில் உடனடியாக குறித்த காணி உரிமையாளரால் பொலிஸ் , சிறப்பு அதிரடிப்படை, இராணுவத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த பகுதியில் அகழ்வு பணியில் ஈடுபட்டு பெருமளவான அபாயகரமான வெடி பொருட்களை மீட்கப்பட்டுள்ளனர்.


குறித்த வெடி பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு அதிரடிப்படையினர், பொலிஸார் ஊடாக மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  


Post a Comment

0 Comments