நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வெள்ளிக்கிழமை 22.10.2021ம் திகதி கட்டுமுறிவு எனும் இடத்தில் வழங்கிவைக்கப்பட்டது
இதன்போது வாகரை பிரதேசத்திலுள்ள கட்டுமுறிவு கிராமங்கிளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு ஷாமலி மகிபாலன், குணரெட்ணம் ஆகியோரின் உதவியில், மட்டக்களப்பு 93ல் உயர்கல்வி கற்ற மாணவர்களால் (93'நண்பர்கள்) இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிங்கப்பூரில் தொழில்புரியும் C. யோகராஜா என்பவரின் நிதியுதவியால் வாகரை பிரதேசத்திலுள்ள ஆண்டான்குளம் பத்தினி அம்மன் ஆலயத்திற்கு மேற்படி நண்பர்களால் முன்மண்டபம் அமைத்துக் கொடுக்கப்பட்டது
புனித மிக்கல் கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 1993ல் உயர்தரம் கல்வி பயின்ற மாணவர்களை ஒன்றினைத்து Friends of '93 Batch - Batticaloa எனும் பெயரில் பல சேவைகளை மட்டக்களப்பில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(செய்தியாளர் - எஸ்.சதீஸ்)
0 Comments