மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள இம்முறை க.பொ.தா உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான 1ம்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி இன்று மண்முனை வடக்குப் பிரதேச பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.கிரிசுதன் தலைமையில் 2 இடங்களில் இடம் பெற்றது.இங்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இவ் தடுப்பூசி மண்முனை வடக்கு பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பாடசாலைகளில் 16 வயதுக்கு மேற்பட்ட 517 மாணவர்களுக்கான தடுப்பூசியானது காலை 9 மணிமுதல் ஏற்றப்பட்டது.
இதில் வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலை (330 பேர்) மற்றும் மட் ஆனைப்பந்தி இராமகிருஸ்ன மிசன் பெண்கள் (10 பேர்) மட் இந்துக்கல்லூரி ( 166 பேர் ) மற்றும் கருவப்பங்கேணி விபுலானந்த பாடசாலை ( 10பேர்) ஆகிய பாடசாலைகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இன்று 1ம்கட்ட தடுப்பூசி எற்றப்பட்டது.
மட்டு கல்வி வலயப்பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் மற்றும் மட்டு வலய கோட்டைகல்வி அதிகாரி ஆகியோர் கலந்து கொன்டு இதனை மேற்பார்வையிட்டனர்.
0 Comments