கோர விபத்தில் இருவர் பலி!



திஸ்ஸமஹராம சதுன்கம, முதியம்மாகம பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்று வலது பக்கத்திற்கு திருப்ப முற்பட்டபோது எதிரில் வந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி அருகில் இருந்த மதிலில் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் தெபரவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.




Post a Comment

0 Comments