பழுகாமத்தில் கூட்டெரு மூலப் பொருட்களை இலகுவாக வெட்டுவதற்காக பயன்படுத்தும் இயந்திரம் இயக்கப்பட்டு செய்முறை பயிற்சியளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநரின் நிதி ஒதுக்கீட்டில் விவசாய அமைச்சின் செயலாளரின் பணிப்பின்பேரில்,  கூட்டெருவிளை தயாரிப்பதற்காக மூலப் பொருட்களை இலகுவாக வெட்டுவதற்காக கமநல கேந்திர நிலையங்களுக்கு வழங்கப்பட்ட இயந்திரம்  இயக்கும் செயற்பாடும் அது தொடர்பான விளக்கப் பயிற்சியும் நேற்று (24.9.2021 பி.ப) பழுகாமம் விவசாய விரிவாக்கல் பிரிவிலுள்ள களுமுந்தன்வெளியில்  இடம்பெற்றது.

இதன்போது மூலப் பொருட்களை சிறு துண்டுகளாக  வெட்டும் மேற்படி இயந்திரம் இயக்கப்பட்டு அது தொடர்பில் விவசாய  விவசாயிகளுக்கு அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.
 

பழுகாமம் பிரிவின் விவசாய போதனாசிரியர் ப. சகாப்தனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வீ. பேரின்பராஜா, லயம் தெற்கு உதவி விவசாயப் பணிப்பாளர் ரி. மேகராசா, 
விவசாய போதனாசிரியர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர் விவசாயிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments