வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெல்லிக்காடு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.

கொவிட் - 19 ஆல் நாடு முடக்கப்பட்டுள்ள இந்நிலையில் தினமும்  நாட்கூலி வேலை செய்து தமது குடும்பத்தை பாதுகாத்துவரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் நெல்லிக்காடு பகுதிக்கு இன்று விஜயம் செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்பகுதியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தலா 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.



அரிசி, பருப்பு, கருவாடு, உள்ளளிட்ட உலர் உணவுப் பொருட்களே இதன்போது வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர், அக்கட்சியின் வெல்லாவெளி பிரதேச நிருவாகத்தினர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.



Post a Comment

0 Comments